|
நாட்டையும் மக்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கண்டி அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துஅரசியல்வாதிகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதனை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்வது குறித்தே அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் அரசியல்வாதிகள் ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்தாமல் இருத்தல் வேண்டும்
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில்சரியாக தெரிந்தவர்கள் மட்டுமே கருத்து வெளியிடல் வேண்டும். தமக்கு பூரணமாக தெரியாத விடயங்கள் குறித்து எல்லோரும் பேசக்கூடாது.
நாட்டில் கலவர நிலைமையை ஏற்படுத்தாது நாட்டு மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டியது அவசியமானது என அஸ்கிரி பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாமஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
|
Tuesday, 23 June 2015
![]() |
கருத்துக்களை வெளியிடுவதனை விட்டு நாட்டை அபிவிருத்தி செய்வது குறித்து அரசியல்வாதிகள் கவனம் செலுத்தல் அவசியம் -அஸ்கிரிய பீடாதிபதி |
Loading...
