- 099 - முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
- 1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.
- 1654 - பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்
- 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
- 1905 - நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர்.
- 1967 - இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.
- 1981 - ஈராக்கில் பாக்தாத் அருகே கட்டுமானம் முடிவடையும் நிலையிலிருந்த Nuclear Reactor அணு உலையை இஸ்ரேலியப் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கி அழித்தன.
- 1993 - தென்னாப்பிரிக்கா மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டது.
- 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- 2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
Sunday, 7 June 2015
![]() |
வரலாற்றில் இன்று - ஜுன் 7 |
Loading...
