Sunday, 7 June 2015

இந்திய 'ஏ' அணி ராகுல் டிராவிட் கையில் ஒப்படைப்பு!

புதுடெல்லி :இளம் வீரர்களை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்திய 'ஏ' அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆலோசகர்களாக  கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆலோசகர் குழுவில் ராகுல் இடம் பெறாதது குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் ராகுல் டிராவிட்,  திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் இந்திய 'ஏ' அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து பி.சி.சி.ஐ பொதுச்செயலாளர் அனுராக் தாக்கூர் கூறுகையில், தக்க தருணத்தில் ராகுல் டிராவிட்டிடம் இளம் அணி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Loading...