பிஜீங்,
சீனாவில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த புத்தர் சிலை சுமார் 800 வருடங்களுக்கு முந்தியது. இதனை தற்போது சீன அரசு புதுப்பித்து மறுசீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது.
இந்த புத்தர் சிலை புதுப்பிக்க்கும் பணியில் சீன அரசு கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இந்த புணரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது.சுமார் 60 மில்லியன் டாலர்கள் (யூவான்) கொண்டு செலவிடவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புத்தர் சிலை 50 ஆண்டுகளுக்கும் மேலும் ஒளிரும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த புத்தர் சிலை 7.7 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 12.5 மீட்டர் அகலம் கொண்டதாக காணப்படுகிறது. மேலும் வேறு எங்கும் இல்லாத வைகையில் இந்த புத்தர் சிலையில் 1000 கைகள் இருப்பது அதிசயம் ஆகும். சீனாவில் ஆட்சி செய்த சாங் வம்சத்தால் (618-907) இந்த புத்தர் சிலை வடிவமைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1999-ம் ஆண்டு யூனஸ்கோ உலக பாரம்பரிய சின்னத்தில் அங்கரிகத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சிலை சீனாவில் உள்ள மியூசியத்தில் பார்வையாளர்களுக்கு வைக்கபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
