வாஷிங்டன்
வேற்று கிரகவாசிகளின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது vault.fbi.gov இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.
இது அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக் இருக்கலாம். அல்லது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம்.
இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன. என கூறுகிறது.
அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் சில
1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக எடுத்து வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுபாட்டின் கீழ் உள்ளனர் (under remote control)
2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது.வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.
4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்க வில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர்.
7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.
வேற்றுகிரகவாசிகள் கடந்த 50 ,60 ஆண்டுகள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களால் 100 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் வருகை தந்திருக்க முடியும்.மனிதர்கள் முன்னேற்றம் அடைந்ததாலும் நவீன கருவிகளாலும் இன்று தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.
OR
