அமெரிக்காவில் ஒரு ஆபிரிக்க அமெரிக்க தேவாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், 9 பேரை சுட்டுக்கொன்ற ஒரு வெள்ளையின துப்பாக்கிதாரியை அந்நாட்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலை ஒரு வெறுப்புணர்வு குற்றமாக கருதுவதாக தெற்கு நகரான சார்ல்ஸ்டனில் இருக்கும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் தேடிவரும் நபரின் வயது இருபதுகளில் இருக்கும்.
அந்த தேவாலயத்தின் மதபோதகர் கிளெமெண்டா பிங்க்னியும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கொலைகளுக்கான காரணத்தை முழுமையாக புரிந்துகொள்ளவே இயலாததாக இர்ப்பதாக சார்ல்ஸ்டனின் தலைமை காவல் துறை அதிகாரி கிரெக் மெல்லன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத பெரும் சோகம் என்று நகரத்தின் மேயர் ஜோசப் ரிலே தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த இந்த இமானுவேல் தேவாலயம், அமெரிக்காவின் மிகப் பழமையான ஆப்பிரிக்க அமெரிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.
