Thursday, 18 June 2015

கடந்த ஆண்டு ஆறு கோடி பேர் அகதிகளானார்கள்: ஐநா

  • 27 நிமிடங்களுக்கு முன்னர்
பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கடந்த ஆண்டு தான் ஆறுகோடிபேர் அகதிகளாகியிருக்கிறார்கள்
பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கடந்த ஆண்டு தான் ஆறுகோடிபேர் அகதிகளாகியிருக்கிறார்கள்
உலக அளவில் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் போர்கள் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதையும்விட மிக அதிகபட்சமாக உயர்ந்திருப்பதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் ஆறுகோடி பேர் உலக அளவில் இப்படி பலவந்தமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஐநா மன்றம் கணக்கிட்டுள்ளது.
இப்படியான அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் சிறார்கள்.
சிரிய மோதல்களில் தான் அதிகபட்சமானவர்கள் இப்படி இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
நாடுகளின் அரசாங்கங்கள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தமாத்திரத்தில் போர்களை துவங்குவதாகவும், சர்வதேச சமூகம் அதை தடுக்க சுத்தமாக இயலாமல், முயலாமல் இருப்பதாகவும் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான ஆணையர் அந்தோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
Loading...