நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகரின் அதிகாரத்திற்கு சவால் விடுக்கும் வகையில் நீதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்துவதா இல்லையா என்பதனை கட்சி தீர்மானிக்க முடியாத எனவும் அவர், சபாநாயகர் கூட தனித்து தீர்மானிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
