முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆசியாவில் அண்மைக் காலத்தில் ஆட்சி செய்த மிகவும் மோசமான ஆட்சியாளர்ராக மெதமுலன ராஜபக்ஸவை குறிப்பிடமுடியும். இந்த அரசாங்கத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்தத் தவறியுள்ளமை வருத்தமளிக்கின்றது.
ராஜபக்ஸ அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அவர்களுக்கு தூதுவர் பதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவரை விமானப்படையின் தளபதியாக நியமிக்க மைத்திரியின் உறவினர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதுவரையில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஜனாதிபதியின் உறவினர்கள் எயார் வைஸ் மார்ஸல் ககன் புலத்சிங்களவை விமானப்படைத் தளபதியாக நியமிக்க முயற்சிக்கின்ற போதிலும் அவர் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய ஓர் குற்றவாளியாகும்.
ஜனாதிபதியின் உறவினர்கள் எயார் வைஸ் மார்ஸல் ககன் புலத்சிங்களவை விமானப்படைத் தளபதியாக நியமிக்க முயற்சிக்கின்ற போதிலும் அவர் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய ஓர் குற்றவாளியாகும்.
சஜின்வாஸ் குணவர்தனவின் விமான நிறுவனத்திற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ககன் புலத்சிங்கள மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் நிறுவப்பட்டிருந்த முக்கிய பிரபுக்களுக்கான ஹெலிகொப்டர் பிரிவை ரத்மலானைக்கும், ரத்மலானையிலிருந்து நிறுப்பட்டிருந்த அதிபார வான் போக்குவரத்துப் பிரிவை கட்டுநாயக்கவிற்கும் மாற்றியிருந்தார்.
இந்த நடவடிக்கையினால் விமானப்படையில் 76 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இலங்கை விமானப்படையில் இடம்பெற்ற இந்த மோசடி குறித்து இதுவரையில் எவ்வித விசாரணைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
