முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பிணை கோரிக்கை குறித்த மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றில் இன்றைய தினம் இந்த மன விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடுவெல நீதிமன்றினால் பசில் ராஜபக்ஸ விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திவிநெகும திட்டத்தில் மோசடி இடம்பெற்றதாக பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிணை மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் உயர் நீதிமன்ற நீதவான் சரோஜனி குசலா வீரவர்தன அறிவித்துள்ளார்.
