முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் உச்ச நீதிமன்றில் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரூ ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்ய உள்ளனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரமற்றது என அறிவிக்குமாறும், கைது செய்யப்படுவதனை தடுக்குமாறும் கோரி கோதபாய சட்டத்தரணிகள் ஊடாக அண்மையில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
