Thursday, 11 June 2015

''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம்

ழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா, நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம், '' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்களிலும் வீரர்களுக்கு சுதந்திரம் தேவை. இவை மறுக்கப்படும் போது வீரர்களால் களத்தில்  திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. தற்போது பாகிஸ்தான் வீரர்கள் பள்ளி மாணவர்களைப் போல நடத்தப்படுகின்றனர்'' என்றார். 

இலங்கை அணியுடனான தொடர் குறித்து வாசிம் அக்ரம் கூறுகையில், இலங்கை அணி சொந்த மைதானத்தில் கூடுதல் பலத்தை பெறும் வாய்ப்புள்ளது என்றும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
Loading...