தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது.
44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன.
இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்தவை. வட மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்த அணிகள் கவுரவ அழைப்பாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பங்கேற்பது வழக்கமானது. ஜுன் 21ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பின்னர் 24 முதல் 27 வரை காலிறுதி ஆட்டங்களும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும் ஜுலை 3ஆம் தேதி மூன்றாவது இடத்துக்கான போட்டியும் ஜுலை 4ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.
நாளை அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சான்டியாகோ நகரில் போட்டியை நடத்தும் சிலி அணி ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளையும் சோனி சிக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் நேரடியாக ஒளிபரப்புகின்றன.