ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக செய்ய வேண்டிய ஒன்று என்றால் அது நாடாளுமன்றத்தை கலைத்து புதிய மக்கள் ஆணையை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்துவதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே பி வி யின் மேல்மாகாண சபை உறுப்பினர் கே.டி லால்காந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர்.
தற்போதுள்ள நாடாளுமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ள ஒன்று.
இந்த நிலையில் இந்த நாடாளுமன்றத்தை உடன் கலைத்து புதிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கடமையாக உள்ளதாகவும் கே டி லால்காந்த குறிப்பிட்டார்.