Friday, 12 June 2015

லஞ்சம், ஊழல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்

லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரிடம் இவ்வாறு கோரிக்கை விடுப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊழல் மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று எங்களுக்கு சட்டமா அதிபரை வலியுறுத்த முடியாது.

எனினும், இது தொடர்பில் சட்டமா அதிபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அஜித் பீ பெரேரா குறிப்பிட்டார். 
Loading...