இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 54 இலங்கையர்கள் உட்பட, 65 பேர் நடுக்கடலில் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய சுங்கத் துறையினரால் திருப்பியனுப்பப்பட்ட இவர்கள், இந்தோனேசியாவின் ரோட் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி திருப்பியனுப்பப்பட்ட இவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை மீனவர்கள் மீட்டு இந்தோனேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த அகதிகள் மேற்கு திமோர் மாகாணத்திலுள்ள, குபாங் நகருக்கு மாற்றப்படலாமென மேலும் தெரிவிக்கப்படுகிறது.
