Tuesday, 2 June 2015

450 பேருடன் சீனா ஆற்றில் கவிழ்ந்த கப்பல், தேடுதல் தொடர்கிறது

15 மணிநேரம் கடந்து 65 வயதுப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்
சீனாவில் ஆற்றில் கவிழ்ந்துள்ள பயணிகள் கப்பல் ஒன்றுக்குள் இன்னும் யாராவது உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர்.
கப்பல் கவிழ்ந்து 15 மணிநேரம் கடந்தும் சுழியோடிகள் 65 வயதுப் பெண் ஒருவரை கப்பலுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
யாங்ட்ஸே ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பல் புயல்காற்றில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
தி ஈஸ்டன் ஸ்டார் கப்பலில் பயணிகளும் சிப்பந்திகளுமாக 450 பேர் இருந்துள்ளனர்.
ஒருசில நிமிடங்களில் இந்தக் கப்பல் மூழ்கியதாக தெரியவருகின்றது.
ஒரு டஜன் கணக்கானோரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
மூழ்கிய கப்பலின் மாலுமி ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பதை இன்னொரு படகு கண்டதை அடுத்தே, உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...