Monday, 29 June 2015

இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி கடும் வீழ்ச்சி – ஐரோப்பிய ஒன்றியத் தடையின் விளைவு

இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை  மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2014 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து இலங்கையின்  கடலுணவு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி, 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 23.9 மில்லியன் டொலருக்கு கடலுணவு ஏற்றுமதி செய்த இலங்கை , இந்த ஆண்டில், 14.1 மில்லியன் டொலர் கடலுணவு ஏற்றுமதி வருவாயையே பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான கடலுணவு  ஏற்றுமதி, 68.3 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை, கடந்த ஜனவரி 13ஆம் நாளில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
2013ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 74 மில்லியன் டொலருக்கு கடலுணவுப் பொருட்களை சிறிலங்கா ஏற்றுமதி செய்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினால் இலங்கை  சுமார் 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி வாய்ப்பை இழந்துள்ளது.
Loading...