Friday, 26 June 2015

தம்புள்ளைப் பள்ளிவாசலுக்கு தேசிய நீர்வழங்கல் சபையால் ஆபத்து-- பஷீர் சேகு¬தாவூத்














தம்புள்ளைப் பள்ளிவாசலுக்கு நீர்ப்பிரச்சினை வடிவத்தில் புதியதொரு பிரச்சினை தோன்றியிருக்கிறது. தம்புள்ளை நகரிலிருந்து சுமார் 10-12 கி.மீ. தூரத்திலுள்ள நாயக்கும்புற கிராமத்திற்கு நீர் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை சில நாட்களுக்கு முன்பு முயற்சித்த வேளையில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வினயமாக அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்த பஷீர் சேகுதாவூத்

அது தொடர்பான விபரங்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தெளிவுபடுத்தியதோடு பள்ளிவாசலினூடாக நீர்க்குழாய்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுமாயின் இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்காகவும் இடமளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுத் தற்போது பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திற்கு மேலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற சூழ்நிலையையும் விவரித்துள்ளார்.

விரைவில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும் பிரச்சினையுடன் தொடர்புபட்ட ஏனையவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
Loading...