Saturday, 6 June 2015

எந்த தாக்குதலையும் பாகிஸ்தானுக்கு சமாளிக்கும் திறன் இருப்பதால் இந்தியாவை பற்றி கவலைப்பட தேவையில்லை..!!

எந்த தாக்குதலையும் சமாளிக்கும் திறன் இருப்பதால் இந்தியாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹில் ஷெரீப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் இந்தியாவிடம் இருந்து வரும் எத்தகைய சவாலுக்கும் தக்க பதிலடி கொடுப்பது எப்படி என்பது தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இந்தியா கூறும் எந்த குற்றச்சாட்டு பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்த ரஹில் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் திறனுடன் தாம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானையும், காஷ்மீரையும் எந்த விதத்திலும் பிரிக்க முடியாது என ரஹில் கூறியிருந்ததற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருந்தது. இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் காஷ்மீர் விவகாரத்திற்கு ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் இந்தியா தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார்.
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டும் வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை எந்த காரணமும் இல்லாமல் இந்தியா ரத்து செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி ஆட்சி பொறுப்பேற்று 3 ஆடு நிறைவு பெற்றதை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
Loading...