சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் மூன்று விண்வெளி வீரர்கள் அடுத்த மாதம் பூமி திரும்பவுள்ளனர்.
அவர்கள் கடந்த மாதம் பூமி திரும்பவிருந்தனர்.
எனினும் அவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட விண்ணோடம் பழுதடைந்த நிலையில், இந்த பயணம் ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர்கள் அடுத்த மாதம் 11ம் திகதி பூமி திரும்புவார்கள் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அளவில், விண்வெளி ஆய்வு மையத்துக்கான பொருட்களை ஏற்றிய விண்ணோடம் ஒன்றை ரஷ்யா செலுத்தவுள்ளது.
ஏற்கனவே இவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணோடம் ஒன்று பிரதான கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்த நிலையில், பூமியில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது
