Thursday, 25 June 2015

மகாராணி மாளிகை மாறக்கூடும்

பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் மஹாராணியின் குடும்பம்
பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் மஹாராணியின் குடும்பம்
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் மகாராணியார் தற்போது வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் மிகப்பெரிய பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளவிருப்பதால் ராணியாரும் அவரது குடும்பமும் அங்கிருந்து சிலகாலம் வெளியே செல்ல வேண்டி நேரலாம் என்று கூறப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனையில், நூற்றைம்பது மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் மதிப்பிலான பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. அதையொட்டி அங்கு வசிக்கும் ராணி எலிசபெத் அம்மையார் தற்காலிமாக வெளியேச் செல்ல வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
null
உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அரண்மனையாக பக்கிங்ஹாம் அரண்மனை இருக்கிறது
சர்வதேச சுற்றுலாப்பயணிகள் லண்டன் வரும்போது பார்க்கவிரும்பும் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக விளங்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் 1952ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக மிகப்பெரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
ஒட்டுமொத்த அரண்மனையிலுமே இந்த பராமரிப்புப்பணிகள் நடக்கவுள்ளன. அது நடந்து முடிய மாதக்கணக்கில் பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த பராமரிப்பு பணிகளை படிப்படியாக செய்வதா அல்லது ஒரேயடியாக செய்து முடிப்பதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். இந்த பராமரிப்புப்பணிகளை ஒரேயடியாக செய்து முடிக்க சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், அந்த அரண்மனையிலிருந்து மாகாராணியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளியேறவேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.
அப்படி மாகாராணியாரும் அவரது குடும்பமும் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேறினால், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து 25 மைல்தொலைவில் இருக்கும் விண்ட்சர் காஸ்ல் என்னும் மகாராணியின் இன்னொரு அரண்மனைக்கு அவரது குடும்பத்தவர் இடம்பெயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
null
ஒட்டுமொத்த அரண்மனைக்கும் மராமத்துப்பணிகள் தேவைப்படுகின்றன
உலக அளவில் புகழ்பெற்ற இந்த பக்கிங்ஹாம் அரண்மனை ‘க்ரவுன் எஸ்டேட்’ என்ற ராஜ குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கும் சுயாதீனமான வர்த்தக அமைப்பின் கீழ் ராணியார் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த "கிரவுன் எஸ்டேட்" வசமுள்ள ராஜ குடும்ப சொத்துக்களில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 285 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் இலாபம் பிரிட்டிஷ் அரசின் கருவூலத்துக்கு வாருமானம் கிடைத்திருக்கிறது. முந்தைய ஆண்டைவிட சென்ற ஆண்டு 6.7 சதவீதம் அதிக லாபம் கிடைத்திருக்கிறது.
இந்த பணத்தில் இருந்து 15 சதவீதத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் எலிசபெத் ராணியாருக்கான செலவினங்களுக்காக ஆண்டுதோறும் வழங்குகிறது. அதன்படி கடந்த ஆண்டு ராணியாருக்கு 37.9 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்க் பவுண்டுகள் செலவினத்துக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்திருந்தது. அதில் அவர் 35.7 மில்லியன் செலவழித்திருந்தார்.
null
பக்கிங்ஹாம் அரண்மனையின் பராமரிப்புப்பணிகள் பலமாதங்கள் நீடிக்கலாம்
"கிரவுன் எஸ்டேட்"டின் பராமரிப்பில் இருக்கும் இராஜ குடும்ப சொத்துக்களின் மொத்த மதிப்பு கடந்த ஆண்டில்1150 கோடி பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டைவிட இந்த சொத்துக்களின் மதிப்பு 16.1% அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...