பிரான்ஸ் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும்
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் “மிகவும் முக்கியமான உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை” இணையதளம் வெளிட்டு உள்ளது.
இணையளம் வெளியிட்டு உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதானா? என்று அமெரிக்கா இதுவரையில் உறுதிசெய்யவில்லை. இருப்பினும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லை உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு முகமையானது குற்றம் சாட்டப்பட்டது. பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையின் கீழ்உள்ள தகவல்களை வெளியிட தொடங்கிவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்தது கடந்த செவ்வாய் கிழமை. அமெரிக்காவின் பாதுகாப்பு முகமையான என்.எஸ்.ஏ. தொலைத்தொடர்பு கண்காணிப்பை இலக்காகவைத்து பெறப்பட்ட தகவல்களே இதுஎன்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அதிகரிகள், மந்திரிகள் மற்றும் அமெரிக்காவிற்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் உளவுபார்க்கப்பட்டு உள்ளனர்.
2012-ம் ஆண்டு தேதியிடப்பட்ட ஆவணத்தில் ஹாலாண்டே யூரோப்பகுதியில் இருந்து கிரேக் வெளியேறுவதற்கான சாத்தியம் தொடர்பாக ஹாலண்டே ஆலோசனை நடத்தியதும், 2011-ம் ஆண்டு தேதியிடப்பட்ட ஆவணத்தில் சர்கோட்சி, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முயற்சி செய்ததும் வெளியாகிஉள்ளது. “விக்கிலீக்ஸ்” இணையதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சேவிடம் இருந்து வெளியேறிய ஆவணங்களா? என்பது தெளிவாகாமலே உள்ளது என்று பி.பி.சி. செய்திவெளியிட்டு உள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களானது பிரான்ஸ் விடுதலைப் செய்தித்தாள் மற்றும் மீடியாபார்ட் புலனாய்வு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஜூலியன் அசாஞ்சேவால் வெளியிடப்பட்ட அறிக்கையை கொண்டுஉள்ள வீக்கிலீக்ஸில், “பிரான்ஸில் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசானது, கூட்டுநாடால் விரோதமாக கண்காணிக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளும் உரிமை பிரான்ஸ் மக்களுக்கு உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாக கிரிஷ்டின் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு எதிராக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கெட்கும் பணியினை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு செய்ததை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் எந்தஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்த நேரத்தில், அவர்கள் இரகசிய அறிக்கைகளை பெற்று உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்கா மறுப்பு
விக்கிலீக்ஸ் இணையதளம் குற்றம் சாட்டி வெளியிட்டு உள்ள தகவல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசுகையில், குறிப்பிட்ட உளவுத்துறை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்கப்போவது கிடையாது,” என்று கூறிஉள்ளார்.
“ஒரு பொது விவகாரமாக, நாங்கள் ஒருகுறிப்பிட்ட மற்றும் உறுதியான தேசியபாதுகாப்பு தொடர்பாக முக்கியநோக்கம் இல்லாமல், எந்தஒரு வெளிநாட்டையும் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனை சாதாரண மக்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவு படுத்துகிறோம். நாங்கள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவின் உரையாடல்களை இலக்காக கொள்ளவில்லை, இனியும் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் அனைத்து விவகாரங்களிலும், சர்வதேச நாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு பிரான்சுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிரான்ஸ் எங்களுடைய இன்றியமையாத நட்பு நாடு ஆகும்,” என்று அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திற்கு ஹாலண்டே அழைப்பு
விக்கிலீக்ஸில் வெளியாகி உள்ள தகவல், பிரான்ஸில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா மறுப்பு தெரிவித்து இருந்தாலும், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார்.
பிரான்ஸ் நாளிதழ்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை மதிப்பீடு செய்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அதிபர் ஹாலண்டே அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவருடைய உதவியாளர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியான மிஷல் அலியோ-மரி செய்திசேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவால் எங்களுடைய உரையாடல்களில் தலையிட முடியும் என்று எங்களுக்கு அதிகநாட்களுக்கு முன்னதாக தெரியும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாங்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபர் இடையே எந்தஒரு தொலைபேசி உரையாடலும் நடைபெறாவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இச்செய்தியில் உண்மைதன்மை இருப்பினு, இது இரு நாடுகள் இடையே உள்ள நட்புறவில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து உள்ளார்.
2013-ம் ஆண்டில் அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்பாக எட்வார்ட் ஸ்னோவ்டென் தரப்பில் கசியவிடப்பட்ட ஆவணங்களில், அமெரிக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்லை அமெரிக்கா உளவுபார்த்தது தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததும், அமெரிக்க நேரடியாக எந்தஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் தற்போது தொலைபேசி பேச்சுக்கள் உளவுபார்க்கப்பட வில்லை, இனிவரும் காலங்களிலும் உளவுபார்க்கப்படாது என்று தெரிவித்தது. இப்போது உளவுபார்க்கப்பட்ட விவகாரம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நட்பு நாடுகளுக்கு இடையே உளவுபார்ப்பு இல்லை என்று மெர்கல் கூறிஉள்ளார்.
இதற்கிடையே பிரான்ஸ் அதிகாரிகளை அமெரிக்காவிற்கு பதிலாக ஜெர்மனி தேசிய உளவுப்பிரிவினர் உளவுபார்த்தனர் என்று ஜெர்மன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஜெர்மனி உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
