கருத்து ரீதியாக மோதி வெற்றி பெற திராணியற்ற கோழைகள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தால் எனது கருத்துக்களை முடக்க முற்படுவது கீழ்தரமானதாகும்.
இது தொடர்பில் ஆவேசமாக குமுறுகிறார் அஹமட் புர்க்கான்JP
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரினால் கல்முனை சந்தாங்கேணி மைதானாத்தினை விஸ்தரிப்பதாக கூறி தனியார் பஸ்நிலையம் மற்றும் கல்முனை சுதந்திர சதுக்கத்தின் முன்பாக அமையப் பெற்ற கடைகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்படும் எனக்கூறி அப்படி அகற்றப்படுகின்ற கடைகளுக்கு பதிலாக அதே இடத்தில் புதிய கடைகள் நிர்மானித்து தரப்படும் என்று அக்கடைகளின் உரியாளர்களிடம் வாக்குறுதியளித்த கல்முனை மாநகர முதல்வர் பின்னர் குறித்த இடத்தில் கட்டப்பட்ட கடைகளை அண்மையில் அதன் உரிமையாளர்களுக்கு கையளித்திருந்ததை யாவரும் அறிவோம். ஆனால் அதில், ஒரு கடை உரிமையாளரை மாத்திரம் வலுக்கட்டாயமாக அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என கருதி அவருக்கு வழங்கப்பட்ட கடையை பறிமுதல் செய்து தனது அடியாற்களை கொண்டு அந்த ஏழையின் கடையை மீண்டும் இடித்து தரைமட்டமாக்கி தனது அரசியல் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டதாக கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி தனது கடை உடைக்கப்படுவதாக அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவ் உரிமையாளரை தாக்க முட்பட்டது மாத்திரமின்றி தகாத வார்த்தைப் பிரயோகங்களினாலும், பொது இடத்தில் இழிவுபடுத்தியும்,அச்சுறுத்தியு ம் உள்ளனர்.அதுமட்டுமன்றி, குறித்த கடையை தனது அடிவருடிகளில் ஒருவருக்கு மேயர் நிஸாம் காரியப்பர் அவர்களினால் வழங்கப்பட்டும் உள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்ததில் குறித்த அக் கடை உரிமையாளரான அஹமது லெப்பை முகம்மது காஸிம் 65 வயதுடைய முதிர்ந்தவர் என்றும் மேலும் அவர், தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடகப்பேச்சாளரான MC அஹமட் புர்க்கான் அவர்களின் தகப்பனார் எனவும் பின்னர் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அஹமட் புர்க்கான் JP அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தனது கருத்தை மிகுந்த மனவேதனையுடன் கீழ்கண்டவாறு தெரியப்படுத்தினார்.
சுமார் 25 வருடங்களாக எனது தகப்பனார் அந்த இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றார். அதுமாத்திரமின்றி உரிய முறையில் எந்த விதமான நிலுவைகளும் இன்றி நாங்கள் மாநகர சபைக்கு உரிய முறையில் வரிப்பணமும் செலுத்தி வருகின்றோம். இது இவ்வாறிருக்க சமூகம் சார்ந்த தேவைக்காக மாநாகர முதல்வரின் வேண்டு கோளுக்கு அமைவாக குறிப்பிட்ட இடத்தை இடிக்க நாங்கள் அனுமதித்தோம்
( நாங்கள் மாத்திரம் அல்ல ஏனைய கடைஉரிமையாளர்களும் கூட)
மாநகர சபையினால் இடிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை உரிய முறைப்படி உரியவர்களுக்கு மாநகர முதல்வர் வழங்கியிருக்க வேண்டும். அதுதான் நியாய பூர்வமான செயலாகும். ஆனால் அவர் அவ்வாறு செய்ய வில்லை மாநாகர முதால்வரால் இது தொடர்பாக நியமிக்கப்பட்டவர்களும் தங்களுக்கு விசுவாசமானவர்களுக்கு அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக எனது தகப்பனார் என்னிடம் சில தினங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டி, இதனை நியாயமான முறையில் பெற்றுத்தருமாறு என்னிடம் வேண்டிக் கொண்டார். அதன் படி நானும் மேயர் நிஸாம் அவர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட விடயாமாக இருவரும் கலந்தாலோசித்தோம். ஆனால் அவர் நியமிக்கப்பட்ட குழுவிற்கு எதிராக என்னால் செயல்பட முடியாது.என்றும் உங்கள் இடத்துக்கு இடம் தந்தால் சரிதானே அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.அத்துடன் உங்கள் தகப்பனாரை வந்து என்னை மீண்டும் ஒரு முறை சந்திக்க சொல்லுங்கள் . இது தொடர்பில் உங்கள் தகப்பனார் என்னோடு முறன்படுகிறார் அவரை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் என மேயர் நிஸாம் என்னை வேண்டிக் கொண்டார். அதை தொடர்ந்து எனது தகப்பனாரின் பூரண சம்மதத்தோடு மிகச் சுமுகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தேன். அதன்படி மேயர் நிஸாம் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க அக்கடையை என் தகப்பனாரும் பெற்றுக்கொண்டார்.
ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 26/06/2015 அன்றைய தினம் கல்முனை மேயரால் மீண்டும் அழைக்கப்பட்ட என் தகப்பனாரிடம் மேற்படி வழங்கப்பட்ட கடையை திருப்பித் தருமாறு மேயர் நிஸாம் அவர்கள் கோரி இருக்கின்றார். அதுமட்டுமின்றி அதற்கான தகுந்த காரணத்தையும் சரிவர கூற அவர் மறுத்துள்ளார். மாநகர மேயரின் இவ் வேண்டு கோளில் நடுநிலை தவறுதலாக இருப்பதை உணர்ந்த என் தகப்பனார் அக்கடையை மீள தர முடியாது. அது மாத்திரமன்றி, எனக்கான இடத்திற்கு பகரமாக மாற்றீடாக வேறு ஒரு இடம் வழங்கப்படாத பட்சத்தில் கடையை தந்த பிறகு அதனை கேட்பது நியாயம் இல்லை தரமுடியாது என மறுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மேயர் நிஸாம் அவர்கள் என் தகப்பனாரின் கடையை அன்றய தினமே தனது காவலி அடியாற்களை கொண்டு உடைத்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற என் தகப்பனாரை கல்முனை மேயரும் அவரது அடியாற்களும் தாக்கியது மட்டுமட்டுமல்லாமல் பொது இடத்தில் வைத்து மிக மோசமான சொற்பிரயோகங்களால் இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் உள்ளனர்.
அன்றைய தினம் சம்பவ இடத்தில் இருந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் நிஸாம் காரியப்பர் அவர்கள் கடையும் இல்லை அதற்கு பகரமாக எதுவும் இல்லை உங்கள் கடை முன்னதாக இருந்த இடம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடம் எனவே அதற்கு பதிலாக உங்களுக்கு கடை வழங்க முடியாது என கூறி இது தொடர்பாக வேறு ஏதாவது பேசுவதற்கோ அல்லது எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ முயற்சி செய்வீர்களேயானால் உங்களுடைய தகப்பனார் எனது இன்னொரு முகத்தையும் காணவேண்டி ஏற்படும் அது மிக மிக மோசமானதாக இருக்கக்கூடும். உங்களுடைய தகப்பனாரிடம் சொல்லி வையுங்கள் எனக்கூறி ஆக்குரோசத்துடன் தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.
நான் கேட்கிறேன் கடந்த 25 வருடங்களில் குறித்த இடத்தில் பல விதமான அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக அரசாங்க மற்றும் தனியார் தொன்டு நிறுவனங்களால் சந்தாங்கேணி மைதானாம்,சுதந்திர சதுக்கம், தனியார் பஸ் நிலையம் குறிப்பாக பொதுச்சந்தைக்கு செல்லும் பாதை என்பவை உள்ளடங்கும். அந்த வகையில் எங்களுக்கு சொந்தமான கடை அவ்வாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலமாக இருந்திருந்தால் இது போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது RDA வினால் முன் அறிவித்தல் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா?
அல்லது மாநகரத்திற்கு சொந்தமான இடமாக இருப்பின் முந்தைய மாநகர சபை மேயர்களான சட்டத்தரணி HMMஹரீஸ், செனட்டர் மசூர் மௌலானா, கலாநிதி சிராஸ் மிராசாஹிப் போன்றவர்களினால் முன் கூட்டியே அகற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லையெனில் கல்முனை மாநகர ஆணையாளரினால் முன் அறிவித்தல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க என்மீதுள்ள தனிப்பட்ட அரசியல் காழ்புணர்வின் காரணமாக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சில நொண்டிக் காரணங்களைக் காட்டி அக்கடையைப் பறிமுதல் செய்து தனது ஆதாரவாளரான ஒருவருக்கு அதிகார துஸ்பிரயோகத்தின் அடிப்படையில் வழங்கி பணப் பரிமாற்றமும் செய்துள்ளார். இதுபோன்றவர்களின் கைகளில் தான் இன்று அதிகாரமும் அடாவடித்தனங்களும் தஞ்சம் அடைந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக நீதிமன்றம் செல்வதற்கு தனது தகப்பனார் தயாரான போது அவ்வாறு நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பிறப்பித்தால் ஏனைய கடை உரிமையாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளுவதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே சற்று தாமதியுங்கள் என தனது தகப்பனாரை அஹமட் புர்க்கான் அவர்கள் தற்காலிகமாக தடுத்துள்ளதாகவும் இப்புனித ரமழான் மாதத்தில் இவ்வாரான இழிவான பழிதீர்க்கும் செயலை செய்த மேயர் நிஸாம் அவர்களுடன் மேற் கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள சந்ர்ப்பம் வழங்குங்கள் எனவும் மேலும் அவரிடம் மீதாமாகவுள்ள கடுகளவேனும் மனிதாபிமானத்தை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏனைய கடை உரிமையாளர்களிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்கையில் இவ்விடயம் திட்டமிடப்பட்டு பழிதீர்க்கும் செயல் என தெரியவருவதாக ஏனைய கடை உரிமையாளர்களும் கல்முனை மேயருக்கு எதிராக குற்றம் சாட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இக்கட்டுரை எழுதும் வரை கல்முனை மாநகர முதல்வரை தொடர்பு கொள்ள மேற் கொண்ட அனைத்து நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை அத்துடன் அவருடைய கையடக்க தொலைபேசி தொடர்பு துன்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-ஆப்டீன் அலாவுடீன்
