Saturday, 20 June 2015

தென்னிலங்கையிலிருந்து பணம் வாங்கியதாக வடமாகாண முதலமைச்சர் கூறுவது தவறு

தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமிருந்து பணம் வாங்கியதாக வட 
Mavai senathi5மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் கூறுவது பொய் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றமை தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் திருத்தப்படாத வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக மத்திய அரசிடம் பணம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் 126 மில்லயன் ரூபா நிதியினை பெற்றுக் கொண்டுள்ளதா கவும் மாவை சேனாதிராஜா 26 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

அந்த கருத்துக்களைப் பார்க்கும் போது, மாவை சேனாதிராஜாவின் சட்டைப் பைக்குள் தென்னிலங்கை அரசாங்கம் போட்டதாக கூறுவது போல இருக்கின்றது.

வட மாகாண முதலமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் ஆனவர் தான். கடந்த 11 ஆம் திகதி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். முதலமைச்சர் அதற்கு பதில் தரவில்லை. ஆனால், பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து நிதி பெற்றமை தொடர்பில் விளக்கமளித்துள்ளேன்.

வட மாகாண சபையில் அதிகாரங்கள் காணாது என்றதுடன் மாகாண சபையின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு. மாகாண சபைக்கு எதிராக மத்திய அரசாங்கம் எதிர்த்ததை தமிழத் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வந்துள்ளோம் என்பதற்கு திவிநெகும சட்ட மூலம் ஆதாரமாக உள்ளது.

மாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து 13வது திருத்த சட்டத்திற்கு உட்பட்டு, இணைந்து செயற்படுவதற்கு முழு அதிகாரத்தினையும் வழங்க வேண்டும்.

13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்று வலியுறுத்தி வந்துள்ளோம். தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் இணைந்து ஒன்றுபட்டு செயற்படுவோம் என்பதனை வலியுறுத்தியுள்ளோம். எமக்குள் எந்தவிதமான முரண்பாடுகள் வந்தாலும், அவற்றினை உரிய முறையில் கலந்துரையாடி எதிர்காலத்திலும் சிறந்த முறையில் செயலாற்றுவோம் என்றும் கூறினார்.

நான் எழுதிய கடிதம் பற்றி ஊடகங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால் வட மாகாண முதலமைச்சர் ஆகிய நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் மட்டும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மாகாண சபையின் செயற்பாட்டிற்கு பின்னரான சில நடவடிக்கைகளை தமக்கு தெரியப்படுத்தாமல் செய்வது தான் மறுப்பதாக இருந்ததாக வட மாகாண முதமைச்சர் பதிலளித்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்படுவதற்கு வட மாகாண முதலமைச் சர் உறுதியாக இருக்கின்றார் என்பதனை தெரியப்படுத்துமாறும் முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதேசமயம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை ஒன்றிணைத்து குழு ஒன்றினை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதா கவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைபிற்கு முரண்பாடுகளை உருவாக்க நினைத்தாலும், அவற்றினை அகற்றி ஒற்றுமையுடன் செயற்பட உறுதிபூண்டுள் ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
Loading...