'நாறி மணக்கிறது சந்தை' என்றார் நண்பர்.
'என்ன, ஏது?' என்று கேட்டேன், விவரம் புரியாமல்.

'மாவைக்கும் விக்கிக்கும் அந்த மாதிரித் தொடங்கியிருக்குப் போர். இது இப்ப தொடங்கின போரல்ல. முதலமைச்சர் வேட்பாளர் காலத்திலேயே தொடங்கினது. ஆனால், அப்ப அதை வளர்க்கக்கூடிய சூழல் இருக்கவில்லை. இப்ப அந்தப் புகைச்சல் தீப்பிடிச்சு எரியத்தொடங்கியிருக்கு. எல்லாம் பதவி ஆசையினாலும் வசதி, வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள இருக்கிற போட்டியாலும் வந்த வினை' என்று விளக்கினார் நண்பர்.
உண்மைதான். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெயரளவில் கூட்டமைப்பு என்றிருக்கிறதே தவிர, அது ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பாக இல்லை.
தேர்தல் வெற்றியைப் பெறுவதற்காக சேர்ந்திருப்பார்கள். ஒற்றுமை என்று காட்டுவார்கள். அவ்வளவுதான். அதற்கப்பால் மக்களுக்கான பணிகளைச் செய்வதிலோ, மக்களுடைய பிரச்சினைகளைத்தீர்த்து வைப்பதிலோ இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதிலோ இவர்கள் ஒன்று பட்டு நின்றதும் கிடையாது. ஒற்றுமையாகச் செயற்பட்டதும் இல்லை.
2009 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இப்படித்தான் கூட்டமைப்பு உள்ளுக்குள் குத்து வெட்டுப்பட்டு உடைந்து சிதறியது. அப்பொழுது கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சூ சிறில், கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் சொன்ன குற்றச்சாட்டு, சம்மந்தன் காசு வாங்கிக் கொண்டு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாகும்.
அதாவது அன்றும் காசுப்பிரச்சினையால்தான் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் ஏற்பட்டது. அதனால்தான் உடைவும் நிகழ்ந்தது.

இப்பொழுது மைத்திரி ஆட்சியின்போதும் குழப்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது காசுப்பிரச்சினையே.
கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலுக்காக டிசம்பரில் பெருமளவு காசை வாங்கிக் கொண்டே அன்னச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கூட்டமைப்புக் கேட்டிருந்தது. இதுவொன்றும் ரகசியமான சங்கதிகளல்ல. பரகசியமான பேரம்பேசுதல்கள்.
முன்னர் இனப்பிரச்சினைக்கான பேரம் பேசுதல்கள் வேறு விதமாக நடந்தன. அதாவது உயிர்த்தியாகங்களின் மூலமாகவும் போராட்ட நடவடிக்கைகளின் மூலமாகவும் அந்தச் சூழலை – பேரம் பேசக் கூடிய ஒரு நிலையை போராட்ட அமைப்புகள் உருவாக்கியிருந்தன.
அந்தப் பேரம் பேசுதல்கள் வேறு. இப்போதைய பேரம் பேசுதல்கள் வேறு.
இது தங்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேரங்கள். முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்த பேச்சுகளும் கோரிக்கைகளும் முன்னிறுத்தப்பட்டன.
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது சனங்களின் தலைகளை அடகு வைத்துத் தங்கள் காரியங்களைப் பார்க்கின்ற – தங்களுடைய மடியை நிரப்ப முனைகின்ற பேரம் பேசுதல்கள்.
இதில் பிரச்சினை என்னவென்றால் பங்குபோடுவதில் உள்ள பிணக்குகள்தான்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின் கதவினால் போய் வாங்க வேண்டியதையெல்லாம் வாங்கிக் கொண்டு விட்டார்கள். மாகாணசபைக்காரருக்கு ஒன்றும் வாய்க்கவில்லை என்றமாதிரி ஆதங்கப்படுகிறார் விக்கினேஸ்வரன்.
முன்னர் நடந்த விடயங்கள் அடக்கி வாசிக்கப்பட்டன. இப்பொழுது அம்பலத்தில் விவாதிக்கப்படுகின்றன.
இந்த விடயம் விவகாரமாகி, சந்தி சிரிக்கும் அளவுக்கு மாவையும் விக்கினேஸ்வரனும் கடிதப்போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்குக்களம் அமைத்துப் கொடுத்துத் தன்னை ஒரு புனிதராகக் காட்ட முயற்சிக்கிறார் சிறிதரன் எம்பி. இவருடைய சகோதரரின் இணையத்தளங்கள் இந்தச் செய்திகளை முன் நிரலில் போட்டுக்கொண்டிருக்கின்றன.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று தமிழ் மக்கள் இருந்தால் அவர்களுக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் காத்திருக்கின்றன.

-வடபுலத்தான் |