Monday, 22 June 2015

வெந்தய மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்

மாங்காய் -1
மிளகாய் தூள் - 3 1/2தே.க
உப்பு - 2 தே.க
வெந்தயத்தூள் - 3/4 தே.க



மாங்காயை துண்டுகளாக்கிக் கொண்டு உப்பு போடுங்கள்






வறுத்து பொடி செய்த வெந்தயத் தூளை சேருங்கள்.



மிளகாயை வெயிலில் உலர்த்தி கொரகொரப்பாக அரைத்த தூளை சேருங்கள். 



வேடுகட்டி வையுங்கள். அவ்வப்போது கிளறி  அல்லது குலுக்கி விடுங்கள். 4, 5 நாட்களில் நன்கு ஊறி விடும்.

                      காற்று புகாத  பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர் சாதனப் பெட்டியிலும் வைத்துக் கொள்ளலாம். உப்பு பற்றாவிட்டால் விரைவில் கெட்டு போய் விடும். உப்பு  பற்றவில்லை என்றால் சேர்த்துவிட்டு பாட்டிலில் போடவும்.




குறிப்பு

தேவைப்பட்டால் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.

Thanks

R.Umayal Gayathri






Loading...