கலாநிதி.தயான் ஜயசேகரா
வழமைபோல ஸ்ரீலங்காவின் பரந்த நோக்கமுள்ள தாராண்மைவாதிகள் அ
தை தவறாக கையாண்டுள்ளார்கள், மற்றும் அதில் மிகவும் முக்கியமான ஆளுமையுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உட்படுகிறார். புலம்பெயர்ந்தவர்களை அரவணைத்து செல்லும் அவரது நோக்கம் தவறானது, அதற்கான காரணம் புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமானவர்கள் என்பதல்ல ஆனால் திரு.சமரவீரவின் அரவணைப்பு கண்மூடித்தனமானது.
ஸ்ரீலங்கா அதன் புலம்பெயர்ந்தவரை அல்லது புலம்பெயர்ந்தவர்களை(பன்மை) நிச்சயம் வரவேற்க வேண்டும். நாங்கள் ஒரு நாடு என்கிற வகையிலும் அதேபோல ஸ்ரீலங்கா அரசாங்கம் என்கிற வகையிலும் இது உண்மையான ஒன்று. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் ஒரே சீரான ஒரு அமைப்பு அல்ல. இங்கு நான் புலம்பெயர்ந்த சிங்களவர்கள் நல்லவர்கள் என்றும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தம் கற்பிக்கவில்லை. நான் கருதுவது என்னவென்றால் தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர்ந்தவர்கள் ஆகிய இரு பகுதியினரிலும் மிதவாதிகள் உள்ளதைப் போல தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பதைத்தான். நாடும் மற்றும் அரசாங்கமும் தனது கதவுகளை விரியத் திறந்து சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டியது சிங்கள மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள மிதவாதிகள் மற்றும் அறிவொளி மிக்க நீரோட்டங்களுக்கே.
அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று போராட வேண்டியது உண்மையான ஸ்ரீலங்காவாசிகளை முன்னேற்றுவதற்கே, அதாவது தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர்ந்தவர்களை, இரு பகுதியிலுமுள்ள மிதவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகளிடையே பாலம் அமைக்க வேண்டும். (உண்மையில் இந்தக் கொள்கையைத்தான் பிரான்சில் நான் ஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவம் செய்தபோது ஓரளவு வெற்றியுடன் நடைமுறைப் படுத்தினேன்.) இதற்கு மாறாக திரு.சமரவீர தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள ஸ்ரீலங்கா எதிர்ப்பு சக்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்காவுக்கு விரோதமானவர்கள் என்று சொல்வதின் மூலம், மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராவர்கள் என்று நான் அர்த்தம் கற்பிக்கவில்லை, ஏனென்றால் அது ஜனநாயக முறையிலான ஒரு அரசியல் தெரிவு ஆகும். அல்லது ஸ்ரீலங்காவுக்கு எதிரானவர்கள் என்று நான் அர்த்தப் படுத்துவது வன்முறையான பிரசங்கங்களையும் அல்லது மனநிலையையும் கொண்டவர்களையும் அல்ல. ஸ்ரீலங்காவுக்கு விரோதமானவர்கள் என்று நான் குறிப்பிடுவது, ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு எதிராக குறிக்கோளில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டை உடையவர்களைத்தான். இதற்கான ஆதாரம் ஒரு சாதாரண கண்ணோட்டத்திலேயே, உலகத் தமிழர் பேரவைiயின் (ஜி.ரி.எப்) சுரேன் சுரேந்திரன், வெளியுறவு அமைச்சர் சமரவீரவுடன் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்றை நடத்தியதின் பின்னர் அரசாங்கத்தால் நடத்தப்படும் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உள்ளது, இதிலிருந்து ஜி.ரி.எப் இன் பக்கமுள்ள மிதான மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி அறியக் கூடியதாக உள்ளது. அந்த நேர்காணலில் உலகத் தமிழர் பேரவையின் கொள்கையின் நான்கு தூண்கள் பற்றி அவர் விளக்குகிறார். நான் பொருத்தமற்ற சொல்லை அர்த்தப் படுத்தியிருக்காவிட்டால் அவர் குறிப்பிட்ட மூன்றாவது தூணில் புகையும் துப்பாக்கி உள்ளது.
….மூன்றாவது தூண் பற்றி விளக்குகையில் அவர் சொன்னது: “மூன்றாவது தீவிரமாக பரப்புரைகள் மேற்கொண்டு சர்வதேச சமூகம், சர்வதேச நிறுவனங்கள், மற்றும் அரசாங்கங்கள் என்பனவற்றிற்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்களை விளைவிக்கக் கூடிய மனிதாபிமான சட்டங்கள் என்பனவற்றுக்கு எதிரான மீறலகள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டங்களை மீறியதாகச் சொல்லப்படும் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இரு தரப்பினர் மீதும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான பரப்புரை …. ஸ்ரீலங்கா மக்கள், புலம்பெயர்ந்தவர்கள்,மற்றும் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் என்பனவற்றின் ஒத்துழைப்போடு ஜி.ரி.எப் நடத்த விரும்பும் நான்கு தூண் மூலோபாயம் இதுதான்” என சுரேந்திரன் சொன்னார். அவர் மேலும் தெரிவித்தது 2011 முதல் ஜி.ரி.எப் இந்த திட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று (“நான்கு தூண் மூலோபாயத்தில் ஜி.ரி.எப் வேலை செய்கிறது” காத்யா டீ சில்வா – சேனரத், ஜூன் 16, 2015 http://www.dailynews.lk/?q=local/gtf-work-four-pillar-strategy )
ரணில் – மங்கள – சந்திரிகா மாதிரி நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தல் என்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அவர்களது வெற்றிபெறாத 1995 – 2005 வரையான தசாப்த கால படுமோசமான அமைதி முயற்சிகளிலிருந்து அவர்கள் எதுவித பாடத்தையும் கற்கவில்லை. இது மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்க நிருவாகம் யுத்தத்தின் பின்னான சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை சரியாகச் செய்தது என்று சொல்ல முயற்சிக்கவில்லை. அதற்கு அப்பால்: அந்த ஆட்சியில் செய்யப்பட்ட முதல் தவறு, பேராசிரியர். ரஜீவ விஜேசிங்க தலைமையில் அப்போது அமைக்கப் பட்டிருந்த சமாதான நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தை (எஸ்.சி.ஓ.பி.பி) கலைத்ததுதான்.
ரணில் – மங்கள – சந்திரிகா மூவரணி செய்த மாபெரும் தவறு,புலிகளை மொத்தமாக அழிக்காமல் மிகவும் அடிப்படையாக பிரபாகரனை நீக்காமல் சமாதானம் வந்துவிடும் என்று நினைத்ததுதான். மிகவும் குறைந்த தீவிரம் இருந்த ஜேவிபி கிளர்ச்சி நடந்த 1986 – 1989ல் விஜேவீரவை அழிக்காமல் மற்றும் ஜேவியை தோற்கடிக்காமல் சமாதானத்தை அடைய முடியவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு, மிகவும் அதிகம் வெறிபிடித்த வெற்றிகரமான சக்தி வாய்ந்த எல்.ரீ.ரீ.ஈ விடயத்தில் அது வித்தியாசமாக இருக்கும் என்று கருதியதுக்கு உண்மையில் மிகவும் உயர்மட்ட மழுங்கல் புத்திதான் காரணம்.
தனது பங்குக்கு ராஜபக்ஸ நிருவாகம் அதற்கு எதிரான தவறைச் செய்தது. வெற்றிகரமான ஒரு போர் இல்லாமல் சமாதானத்தை அடைய முடியாது என்பதை ரணில் – மங்கள – சந்திரிகா கூட்டணி உணரத் தவறியது, அதாவது சமாதானத்து அவசியமான ஒரு முன் நிபந்தனை வெற்றிகரமான ஒரு யுத்தம் என்பதை அது உணரவில்லை, அதேவேளை இராணுவ வெற்றி சாத்தியமானதும் மற்றும் அவசியமானதும் என்கிற தனது முன்னோடிகள் உணரத் தவறிய உண்மையை உணர்ந்து செயலாற்றிய மிகவும் திறமையான ராஜபக்ஸ நிருவாகம், அவசியமான நிபந்தனைகளே போதுமான நிபந்தனைகள் எனக் கருதி முன்னவர்கள் செய்ததுக்கு எதிர்மாறான தவறைச் செய்துவிட்டது. யுத்தத்தின் வெற்றிகரமான முடிவுதான் நீடித்த சமாதானத்துக்கு போதுமான நிபந்தனை என்று அது நினைத்தது.
சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் அவசியம் மற்றும் இந்த சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பதுக்கு தேவையானது பொருட்களை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி என்பன மட்டுமன்றி, புனர்வாழ்வளித்தல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்பன மட்டுமின்றி, ஆனால் ஒரு அரசியல் பேச்சு வார்த்தையும் மிகவும் அவசியம் என்பதை அது உணரத் தவறிவிட்டது. யுத்தம் நடைபெற்ற சமயத்தில் ரணில் - சந்திரிகாவால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசியல் பேச்சு வார்த்தைகள் ஒரு மதிப்பிழந்த அரசியல் தந்திரோபாயம் என்பதையும், எனினும் அதேவேளை போருக்கு பிந்தைய நடவடிக்கைகள் மற்றம் நிலையான நீடித்த சமாதானம் என்பனவற்றுக்கான முன் நிபந்தனை ஒரு அரசியல் பேச்சு வார்த்தை என்பதை அது புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.
ரணில் – மங்கள – சந்திரிகா ஆகியோர் சமாதானத்தை அடைவதற்காக தவறான ஆட்களுடன், பாசிச, அடிப்படைவாதிகளான புலிகள் மற்றும் அவர்களது சக பயணிகளுடன் பேச்சுக்களை நடத்தி போராடினார்கள். அவர்கள் புலிகள் அல்லாத ஃ புலிகளுக்கு எதிரான தமிழ் குழுக்களுடன் ஒரு அரசியல் திட்டத்தை செயற்படுத்தி புலிகளை அரசியல் - இராணுவம் ஆகிய இரண்டு கத்திகளுக்கு இடையில் அகப்பட வைத்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காலத்தையும் அரசியல் முதலையும் வீணடித்த 1995 மற்றும் 1997 பிராந்திய ஒன்றியங்கள் என்கிற பொதி, லியாம் பொக்ஸ் உடன்படிக்கை, யுத்த நிறுத்த ஒப்பந்தம், சொல்ஹைம் தியானம், சுனாமிக்குப் பின்னான கூட்டு உடன்படிக்கை என்பனவற்றுக்குப் பதிலாக அவர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப் படுத்தியிருக்கலாம். 13ம் திருத்தத்துக்குள் அவர்கள் ஒரு இடைக்கால நிருவாகத்தை நியமித்து, முன்பு ஐதேக வுடன் செயற்பட்டவர்கள் மற்றும் சந்திரிகா ஸ்ரீலங்கா மக்கள் கட்சியில் இருந்த காலந்தொட்டே அவருக்கு அறிமுகமானவர்கள் ஆகியோர் மூலம் புலிகளுக்கு எதிரான ஒரு முற்போக்கு குழுவினரின் கூட்டணியை நிறுவியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
தங்கள் பங்குக்கு ராஜபக்ஸ அரசாங்கம,; ஜனாதிபதி புட்டின் செச்சினியாவில் றம்சான் காடிரோ மூலமாக வெற்றிகரமாக செயற்படுத்திய திட்டத்தைப் போன்று 2009ல் யுத்தத்தில் வெற்றியடைந்ததும் மற்றும் ரி.என்.ஏ மீண்டும் பலம் பெறுவதற்குள் தங்கள் கூட்டணியை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். மாறாக அது (உயர் – பாதுகாப்பு) அவிவிருத்தி உத்தி ஒன்றை தேர்வு செய்தது, அதில் ஒரு அரசியல் கூறு அதாவது, வடக்கு மற்றும் கிழக்கில் ஸ்ரீ.ல.சு.க வை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு வீண் முயற்சி இருந்தது.
தங்கள் பங்குக்கு ராஜபக்ஸ அரசாங்கம,; ஜனாதிபதி புட்டின் செச்சினியாவில் றம்சான் காடிரோ மூலமாக வெற்றிகரமாக செயற்படுத்திய திட்டத்தைப் போன்று 2009ல் யுத்தத்தில் வெற்றியடைந்ததும் மற்றும் ரி.என்.ஏ மீண்டும் பலம் பெறுவதற்குள் தங்கள் கூட்டணியை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். மாறாக அது (உயர் – பாதுகாப்பு) அவிவிருத்தி உத்தி ஒன்றை தேர்வு செய்தது, அதில் ஒரு அரசியல் கூறு அதாவது, வடக்கு மற்றும் கிழக்கில் ஸ்ரீ.ல.சு.க வை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு வீண் முயற்சி இருந்தது.
சுவராஸ்யமான முறையில் சந்திரிகா மற்றும் மகிந்த ராஜபக்ஸ நிருவாகங்கள் ஒரே விதமான தெரிவை மேற்கொண்டு ஒரே விதமான தவறைச் செய்தன. அவர்கள் இருவரிடத்திலும் புலிகளுக்கு விரோதமான, பிரிவினைவாதத்துக்கு எதிரான தமிழ் பங்காளி ஒருவர் இருந்தார், அதை அவர்கள் பிரேமதாஸ – ரஞ்சன் விஜேரட்ன காலத்திலிருந்தே பரம்பரைச் சொத்தாகப் பெற்றிருந்தார்கள், ஆனால் அவர்கள் தங்கள் விளையாட்டில் அதைப் பயன்படுத்த தவறி விட்டார்கள். புலிகள் அவரைக் கொல்ல முயன்று மாறாக அவரது ஒரு கண்ணைக் குருடாக்கிய பிறகும் சந்திரிகா பாசிசப் புலிகளுடன் (நோர்வே மூலமாக) பேசுவதை தேர்வு செய்தார்.
மகிந்த ராஜபக்ஸ நிருவாகம் தமிழ் புலிகளின் பாசிச குணாதிசயத்தை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களைத் தோற்கடித்தது, ஆனால் அப்படிச் செய்திருந்த போதும் யுத்தத்துக்கு பின்னான கட்டத்தில், வடக்கில் அடையாளப் படுத்தத் தக்க தமிழ் பங்காளர் மற்றும் மூலோபாயமான கூட்டணி என்பன இல்லாததால் அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு போராட வேண்டியிருந்தது. அத்தகைய தவறை செய்திருந்தும், ரி.என்.ஏ உடனான பேச்சு வார்த்தைகளை முறிவடையச் செய்து அதனை இடை நிறுத்தி இயல்பு நிலை தெரிவாக இருந்த அந்த ஒன்றையும் தவற விட அனுமதித்ததின் மூலம் ராஜபக்ஸ நிருவாகம் அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.
ரணில் மற்றும் சந்திரிகா மற்றும் அவர், முன்பு எங்கு விட்டார்களோ அந்த இடத்திலிருந்து மங்கள சமரவீர ஆரம்பிக்கிறார். மங்கள சொல்வதின்படி ஜி.ரி.எப் மிதவாதமான ஒன்று என்றால், தீவிரவாதம் என்பதைப் பற்றிய அவரது கருத்து என்னவென்று எங்களால் கற்பனை செய்ய முடியும். ஸ்ரீலங்கா அரசாங்கம் - எந்த ஸ்ரீலங்கா அரசாங்கமானாலும் சரி – செய்ய வேண்டியது என்ன, எதைப் பின்பற்ற வேண்டும், அதன் புலம்பெயர்ந்தவர்களை எட்டிப் பிடிப்பதற்கான பணியில், ஒரு பொதுவான மையவட்டக் கொள்கை இருக்கவேண்டும், பிரபாகரனின் சக பயணிகள் மற்றும் மற்றும் அவரையோ அல்லது எல்.ரீ.ரீ.ஈ யினையோ இன்னமும் விமர்சிக்க மறுப்பவர்களை அணுகுவதற்கு முன்னர் அதில் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் இடையே உள்ள புலிகள் விரோத, மற்றும் பிரிவினைக்கு எதிரான சக்திகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பேச்சுக்களுக்குப் பின்னர் தங்கள் கொள்கையின் ஒரு தூணாக நிற்பது, அரசாங்கங்கள் உட்பட சர்வதேச சமூகங்களிடையே, போர்க்குற்றம் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கு வேண்டி பரப்புரை செய்வதே என்று பெருமையடித்துக் கொள்பவர்களை எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பனவற்றின் அடிப்படைப் பணி, எங்கள் தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்காவுக்க எதிரான போர்க்குற்றங்களை விசாரிக்கும்படி பரப்புரைகள் மேற்கொள்ளும் புலம்பெயர் சக்திகளை நிச்சயம் எதிர்த்து, மறுதலித்து, மறுத்துரைத்து தோற்கடிப்பதாகவே இருக்க வேண்டும். இந்த நாட்டின் வெளி விவகார அமைச்சர் என்கிற பதவியில் உள்ள மங்கள சமரவீர வெளிவிவகாரங்களில் பங்காளிகளாக கை கோர்ப்பவர்களை தெரிவு செய்யும்போது மிகவும் நுட்பத்துடன் தேர்வு செய்யவேண்டும்.
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
