Sunday, 28 June 2015

தைரியமும் ஆளுமையும் நிறைந்த ஒரே தவைவன் ஹக்கீம் -M I M மன்சூர் Mpc



முஸ்லிம் சமுகத்தின் நலனுக்காக போராடக்கூடிய சாணக்கியமும், தைரியமும் உடைய ஒரே தலைவன் தேசிய தலைவர் ரஊப் ஹக்கீம்.மட்டும் தான்
நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அத ஆட்சி மாற்றத்தின் சூத்திர தாரி சிறுபான்மை சமுகம் என்றதால் சிறுபான்மை சமுகத்தை ஜனநாயக முறைப்படி நசுக்கும் வேலை செய்ய ஆரம்பித்தது சிங்கள அரசு.
அதாவது 20+ மூலம் சிறுபான்மை சமுகத்தின் மக்கள் பிரதிநிகளை இல்லாமல் செய்ய முட்பட்டது. ஆளும் கட்சி தொடக்கம் எதிர்கட்சி வரை 20+ நிறைவேற்றாமல் பாராளுமன்றம் களையாது என திட்டவட்டமாக கூறிவந்தனர்.
இந்த நிலையில் தான் ஒரு தனி மனிதனாக நின்று சிறுபான்மை சமுகத்துக்கா பாராளுமன்றம் தொட்டு அமைச்சரவை வரை 20+ எதிர்த்து போராடி வந்தார் எம் தேசிய தலைவர் ரஊப்ஹக்கீம்.
இது ஒரு வரலாற்று சாதனையாகும் இந்த நாட்டில் சிங்கள அரசை எதிர்த்து போராடக்கூடிய சாணக்கியமும் தைரியமும் ஆளுமையும் நிறைந்த ஒரே தவைவன் என்றால் அது ரஊப்ஹக்கீம் தான்.
20+ நிறைவேற்றி சிறுபான்மை சமுகத்தை பழிதீர்ப்போம் என கூறி வந்த சிங்கள அரசுக்கு மரண அடி கொடுத்து 20+ நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை களைய வைத்தானே எம் தலைவன் ரஊப்ஹக்கீம் இதற்காகத்தான் இன்று முஸ்லிம் சமுகம் அந்த உத்தம தலைவனோடு உள்ளது.
இந்த நாட்டில் எந்த சிங்கள அரசு வந்தாலும் அதை எதிர்த்து போராடும் தைரியமும் சாணக்கியமும் ஆளுமையும் கொண்ட எம் தலைவன் ரஊப்ஹக்கீமோடு அணி திரள்வோம்  என கிழக்கு மாகாண  சபை அமைச்சர் M I M  மன்சூர் தெரிவித்தார் 


நூர் 
Loading...