சிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான யுக்திகள் குறித்து ஆராய பிரான்ஸில் 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கிறார்கள்.
இராக்கின் ரமாடி நகரை ஜிகாதிகள் கடந்த மாதம் கைப்பற்றிய பிறகு, அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் உறுப்பினர்கள் நிலைமைகளை மீளாய்வு செய்ய நினைக்கிறார்கள்.
ரமாடி நகர வீழ்ச்சியானது, தற்போதைய யுக்தியின் தோல்வியையும், இரான் ஆதரவுடனான ஷியா ஆயுதக்குழுவில் இராக் தங்கியிருப்பது அதிகரிப்பதையும் காண்பிப்பதாக பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
அந்த பேச்சுவார்த்தையில், இராக்கிய பிரதமர் ஹைதர் அல் அபாடி அவர்களும் கலந்து கொண்டார்.
சைக்கிள் விபத்து ஒன்றில் கால் உடைந்துவிட்டதால், அமெரிக்க அரசுத்துறை செயலர் ஜோண் கெரி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
