Sunday, 28 June 2015

குவைத் தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டார்

குவைத் நாட்டில் ஷியா மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை குவைத்தின் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.
null
தாங்கள்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்ததாக இஸ்லாமிய அரசு அமைப்புத் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய அந்த நபரின் பெயர் ஃபாத் சுலிமான் அப்துல் முசேன் அல் காபா என்று தெரியவந்திருப்பதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் வெள்ளிக்கிழமையன்று, தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக விமானம் மூலம் குவைத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நபர் குவைத்தில் சட்டவிரோதமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷியா முஸ்லிம்களை ஏற்காத இஸ்லாமிய அரசு அமைப்பு, தாங்கள்தான் அந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
Loading...