தைவானின் தலைநகர் தய்பெய்யில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஃபார்மோசா வாட்டர் பார்க் என்ற அந்த பொழுதுபோக்குப் பூங்காவில், வண்ணப் பொடி ஒன்று கூட்டத்தினரின் நடுவில் தூவப்பட்டபோது, தீப்பிடித்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பொடியை சிலர் சுவாசித்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
இனி இம்மாதிரி வண்ணப் பொடிகளை பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அந்நாட்டுப் பிரதமர் மாவோ சி கூ உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அந்தப் பூங்கா மூடப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
