
Mubarak Abdul Majeed
ரிசாத் இந்த சமூகத்துக்கு துணிந்து என்ன செய்தார் என ஒன்றை சொல்ல முடியுமா? தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அதனை செய்தவர்களை இவரது அரசாங்கம் கைது செய்விக்க முனைந்தாரா? ஹலால் பிரச்சினை வந்த போது இவரும் அரசாங்கத்தின் அங்கத்தவராக இருந்து அதனை செயலிழக்காமல் இருக்கும்படி செய்து தந்தாரா? மஹியங்கன பள்ளிவாயலை திறக்க வைத்தாரா?
பல பள்ளிவாயல்களுக்கு கல் எறியப்பட்ட போது அத்தகையவர்களில் ஒருவரையாவது கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அமைச்சு பதவியை ராஜினாமா செய்வேன் என கூறினாரா? அதனை துணிந்து செய்தாரா? பேருவலை தாக்கப்பட்ட போது அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் அரசை கண்டித்து பேசினாரா?
அந்த மோசமான செயலுக்காக பதவியை ராஜினாமா செய்தாரா? எதையுமே சமூகத்துக்காக துணிந்து செய்யவில்லை. பள்ளிவாயல் தாக்கப்பட்டால் அங்;கு சென்று சுற்றுலாவாசி போல் பார்வையிடுவது பெரிய விசயமல்ல. இவர் பார்வையிடு முன்னரே அங்குள்ள முஅத்தினார் பார்வையிட்டிருப்பார். ஆக ரிசாத் ஹக்கீம் இருவருமே சுயநல ஏமாற்று பேர்வழிகள். இருவரையும் ஒதுக்காத வரை முஸ்லிம் சமூகத்துக்கு உண்மையான, நே;மையான அரசியல் கிடைக்கப்போவதில்லை.
