
பொத்துவில் 05 ம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயல் கடந்த வியாழன் (28/05/2015) அன்று நீதிமன்றத்தினால் மூடப்பட்டது. இது பற்றி பலரும் பல விதமான கதைகளை கூறினர் .
உண்மைத்தன்மையை அறியும்படி பொத்துவில் நெற் மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலின் தலைவர் MBM. அபுசாலி அவர்களை தொடர்பு கொண்டது .
இது பற்றி அவர் கூறுகையில்;
பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கான வளவு குறித்த ஒரு நபரிடமிருந்து கிடைத்தது , அதற்குள் பள்ளி நிர்மாண வேலை ஆரம்பிக்கும் போதே வளவுக்கு உரிமையாளர் நான் என சகோதரர் தாஹிர் (லாபிர் வைத்தியரின் சகோதரன் ) கூறியுள்ளார் .
ஆனால் வேறு நபரின் பெயரில் இருந்து பெற்றுக்கொண்டமையினால் முன்னாள் தலைவர் அதனை உண்மையற்றது என கருதி ஏற்றுக்கொள்ளவில்லை .
அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கடந்த 8 க்கும் மேற்பட்ட வருட காலமாக குறித்த வழக்கு நடந்து வந்தது , அதன் தீர்ப்பு ( குறித்த வளவு தாஹீரிட்கே சொந்தமானது ) இந்த வாரம் வழங்கப்பட்டதை அடுத்து போலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள் பள்ளிவாயலுக்கு வருகை தந்து கடந்த வியாழன் லுகர் தொழுகையின் பின் (12.45pm) பள்ளிவாயலை மூடி உரிமையாளரான தாஹிரிடம் திறப்பு வழங்கப்பட்டது ,
அதன் பின்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. குறித்த பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வருபவர்கள் , அந்த பகுதியில் தொழில் செய்பவர்கள் மற்றும்பொத்துவில் உலமா சபை மூலமாகவும் குறித்த உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன.
அதன் மூலம் 40 இலட்சம் பணம் கொடுத்தால் பள்ளிவாயல் மீண்டும் கிடைக்கும் என அவர்கள் கூறியதை அடுத்து மேலும் பள்ளிவாயல் நிர்வாகம், பொது நலன் விரும்பிகள் மற்றும் மௌலவி அவர்களின் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி விலையாக 25 இலட்சம் என முடிவாக்கப்பட்டுள்ளது .
இந்த தொகை தற்போது பள்ளி நிர்வாகத்தினால் செலுத்த முடியாமல் உள்ளதால் பொது மக்களையே நாடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .
குறித்த பணத்தை செலுத்தும் வரை எதிர்வரவிருக்கும் ரமழானை வரவேற்க ஒப்பந்த அடிப்படையில் பள்ளிவாயல் திறக்கப்படவுள்ளதாகவும் பேச்சுக்கள் நடைபெறுகின்றது .
மூடப்பட்டிருக்கும் பள்ளிவாயலை மீண்டும் திறக்க 25 இலட்சம் பணம் தேவைப்படுகின்றது .
இது தொடர்பான மேலதிக உண்மை தகவலை உறுதிப்படுத்த ,
பொத்துவில் உலமா சபை தலைவர் – மௌலவி ஆதம் லெப்பை- 00 94 77 67 34 385
மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயல் தலைவர் – MBM.அபுசாலி – 0094 77 80 50 544
பள்ளிவாயலின் வங்கி கணக்கு :
Account
Name :- MASJITHUL MAFASA
Name :- MASJITHUL MAFASA
Account
NO :- 164 2001 9001 4534
NO :- 164 2001 9001 4534
(உண்மை தன்மையையும் வங்கி விபரத்தையும் மற்றுமொரு முறை உறுதி செய்த பின்னர் உதவிகளை செய்யுங்கள் )
