4.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 வயதான இந்தச் சந்தேக நபர், சிங்கப்பூருக்கு பயணமாகவிருந்ததாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
