Tuesday, 2 June 2015

கூடிய கதியில் பொத்துவில் ஆத்தி முனை வீதி திருத்தப் படும் ! மகிழ்ச்சி அடையும் பொத்துவில் மக்கள்

Displaying 20150511_174342.jpg

அதிகமாக வீதி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கி வீதி அபிவிருத்திகளை செய்து வரும் அதே ஊரில்தான் இந்த பாவனைக்கு  உதவாத  மிகவும் கேவலமான வீதி இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா ? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும் பொத்துவில் பிரதேச சபைக்குற்பட்ட  (பொத்துவில் ) ஆத்திமுனை பிரதான வீதியின் நிலைமையே இது.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அதிகளவு மக்கள் வசிக்கும் ஒரு கிராமமே  ஆத்திமுனை கிராமம் . இதற்குள் மக்கள் செல்வதற்கான பிரதான  வீதி அல் அக்ஸா பாடசாலைக்கு அருகினால்  செல்லும் வீதியாகும் . 

இவ்வீதி கடந்த காலங்களில் சரியான முறையில் புனரமைப்பு செய்யாமையினாலும் பாரிய கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதனாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும்  மிகவும் சேதமடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு உதவாதவாறு காணப்படுகின்றது. 

அன்றாடம் அதனூடாக பயணம் செய்யவேண்டிய பாடசாலை மாணவர்கள் அந்தி நேர வகுப்புக்கு செல்லும் மாணவர்கள்  சந்தைக்கு செல்வோர் கடற்கரை செல்வோர் மற்றும் ஏனைய காரணங்களுக்காக செல்வோர் அனைவரும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் செல்கின்றனர் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர்கள் தங்களது துவிச்சக்கர வண்டிகளை தள்ளிக்கொண்டு செல்கின்றனர் . 

இது தொடர்பாக அனைவரும் அறிந்திருந்தும்  இன்னும் எதுவிதமான  முடிவுகளும்  எடுக்கப்படவில்லை . ஆகவே உரிய அதிகாரிகள் தமக்கு இந்த வீதியை புணரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை  விடுக்கின்றனர் 

பொத்துவில் செய்தியாளர் : கபூர் நிப்றாஸ்
Loading...