Thursday, 11 June 2015

மகிந்தா போய் சிறிசேன வந்தாலும் அமைச்சர் பதவியில் ஜெயசூர்யா!

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  சனத் ஜெயசூரியா இலங்கையின் அமைச்சராக நேற்று பதவியேற்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரும், அந்த அணியின் கேப்டனுமான ஜெயசூர்யா இலங்கை மதாரா மாவட்டத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் தபால்துறை துணை அமைச்சராக அவர் பதவி வகித்திருந்தார். 

இலங்கை அதிபராக சிறிசேன பொறுப்பேற்ற போது, ஜெயசூர்யாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. சிறிசேனாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 4 பேர் சமீபத்தில் பதவி விலகினர். அவர்களுக்கு பதிலாகவே ஜெயசூரிய உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.சனத் ஜெயசூர்யாவுக்கு உள்ளாட்சி மற்றும் கிராம அபிவிருத்தித்துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இலங்கை அதிபர் சிறிசேன  முன்னிலையில் அவர் துணை அமைச்சராக  பதவியேற்றுக்கொண்டார். 

தற்போது 45 வயதான ஜெயசூர்யா, கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும் உள்ளார். 
Loading...