Thursday, 11 June 2015

ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம்: உலகின் பணக்கார பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி!

ங்கதேச சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு பின், இன்று வரை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு நிரந்தர பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டுமென்பதே விருப்பமாக உள்ளது. எனவே அவரையே இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக அவருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இவ்வளவு சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உருவெடுப்பார். இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்ச்சருக்கு ஆண்டுக்கு ரூ.4.2 கோடிதான் சம்பளமாக வழங்கப்பட்டது. 

கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்கு நியூசிலாந்தின் ஜான் ரைட் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதற்கு பின் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். 
Loading...