கொழும்பு: 2015 ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் 59 ராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவலை ராணுவ தலைமையகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2009ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நிலைமைகளை கருத்தில் கொண்டு படையினர் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தேவையற்றதென்று கருதப்பட்ட சிறிய வெளியக முகாம்கள் மூடப்பட்டுள்ளது. இதன்படி, 2009ஆம் ஆண்டு 7 முகாம்களும், 2010ஆம் ஆண்டு 9 முகாம்களும், 2011ஆம் ஆண்டு 4 முகாம்களும், 2013இல் 17 முகாம்களும், 2014ஆம் ஆண்டு 24 முகாம்களும் மொத்தமாக 59 சிறிய வெளியக முகாம்கள் மூடப்பட்டடுள்ளது.
2015 ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் 59 ராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல் உண்மையல்ல" என்று கூறப்பட்டுள்ளது.
