Thursday, 18 June 2015

கவிதை - ரமழான் மாதம்!

Image result for ramadan images




வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து 

இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள் வறியவர் தீப்பசி யுணர்ந்து
திருந்திட அருளிடும் மாண்பு

மண்ணறை முஸ்லிம் மாந்தர்கள் கூடி
வாழ்த்தி வரம் பெறும் திரு நாள்-அது
தண்மதி நபிகள் நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள் பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள் வேறாய்
வந்திடும் பன்னிரு மாதம் -அதில்
அருளொளி வீசி திருமறை ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

வாழ்வினை யுணர்ந்து தாழ்வினை மறந்து
வாழ்ந்திட வழிகளை காட்டும் -அது
கூழெனினும் ஏழை குடித்திட ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர் நெஞ்சம் திருந்திடப் பண்ணும்
திருமறையருள் நிதம் பொங்கும்




கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
Loading...
  • இன ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி30.08.2015 - Comments Disabled
  • மக்களின் வங்கிப் பரிவர்த்தனையில் கிரேக்க அரசாங்கம் கட்டுப்பாடு29.06.2015 - Comments Disabled
  • Oil prices down in Asian trade16.06.2015 - Comments Disabled
  • புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்19.07.2015 - Comments Disabled
  • வெளிநாட்டவர்கள் 903 பேர் கைது23.05.2015 - Comments Disabled