Sunday, 21 June 2015

கவிதை : ஓதியே வாழும் மாதம் ..!




மாண்புடன் பொழியும் ' ரமழான்'
மாதமோ "ரஹ்மத் "தாகும்
நீண்ட நாள் பாவம் யாவும்
நீக்கிடும் புனித திங்கள் .!

பூண்டிடும் தர்மக் கொள்கை
பூமியில் மலியப் பண்ணும் 
ஆண்டியோ டரசன் சேரும்
அறத்தினை வளர்க்கும் மாதம் ..!

வஞ்சகம் பொய்மை மாந்தர்
வாழ்வினை அழிக்கும் சூது
நஞ்செனும் செயல்கள் யாவும்
நலமுடன் அறவே நீக்கி
நெஞ்சினில் அன்பு பாசம்
நிறைந்து மே மாந்தர் யாவும்
ஒன்றென மறையோன் வேதம்
ஓதியே வாழும் மாதம் ..!

ஆயிரம் இரவில் காத்து
அருந்தவம் புரிந்து ஈற்றில்
நேய (இ )ரா !"லைலத்துல் கதர் " ரில்
நில மிசை அருளாய் பொங்கும்
தூயதாய் துன்பம் நீங்கித்
துலங்கிடும் ரமழான்தன்னை
நேயமாய் நோற்க .!வென்றே
கண்ணியமாய் கடை பிடிக்கின்றோம் ..

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
Loading...