Sunday, 21 June 2015

எய்ட்ஸ், மெர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிப்பு- வட கொரியா அறிவிப்பு


எய்ட்ஸ், மெர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிப்பு- வட கொரியா அறிவிப்பு







வடகோரியா ஜுன் 20-  எய்ட்ஸ், எபோலா, மெர்ஸ், சார்ஸ் உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் மருந்து எந்த ஒரு நாடும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில் வடகோரியா அதற்கான மரு8ந்தைக் கண்டுப்பிடித்தாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து வைத்துள்ளதாக வடகொரியாவின் மின்ஜோக் தாங்ஷின் என்ற இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர்  கும்டாங் – 2; இது ஒரு ஊசி மருந்து ஆகும்.
இந்த மருந்து மெர்ஸ், எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய்களுக்கு தடுப்பு ஊசியாக செயல்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது. இது கடந்த 1996-ஆம் ஆண்டே தயாரிக்கப்பட்டதாம்.
கடந்த 2006 மற்றும் 2013–ஆம் ஆண்டுகளில் வட கொரியாவில் பறவைக்காய்ச்சல் நோய் கடுமையாக பாதித்த பொழுது இந்த ஊசி மருந்து தான் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Loading...