இராணுவத்தினரை வெளியேறுமாறு கூறுவதற்கு விக்கி ஒன்றும் ஜனாதிபதி இல்லை: சீறுகிறார் நிமல்.
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கூறுவதற்கு விக்கினேஸ்வரன் ஒன்றும்,ஜனாதிபதி இல்லை.அவருக்கு அந்த அதிகாரங்களும் இல்லை என்று சீறிச்சினக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா.
வடக்கில் மக்களை மீண்டும் தூண்டி விடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் உள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும் என்று அண்மையில் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
