வத்திகன் சிட்டி
அந்நியக் குடியேறுகளுக்கு கதவை மூடும் மக்களும் நிறுவனங்களும் கண்டிப்பாக கடவுளிடத்தில் பாவ மன்னிப்பி கேட்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாரந்திர பொது மக்களிளை சந்தித்து வரும் போப் பிரான்ஸ்-இத்தாலியின் பொதுமக்கல் மற்றும் போலீசிடையே நடந்து வரும் பிரச்சினையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவர், இது போன்ற விஷயங்கள் சுமூகமான முறையில் கையாளப் பட வேண்டும் என்று கூறினார்.
குடும்பங்களையும் பாதுகாப்பையும் நாடி வரும் குடியேறிகளுக்கு உதவ மறுத்த அனைவரையும் அண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க அழைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா நாட்டில் இத்தாலி நாட்டிலிருந்து குடிப்புயர்ந்து வரும் குடியேறிகள் ரோம் மற்றும் மிலான் ரயில் நிலையங்களில் தங்கி வருகின்றனர்.
தனது சொந்த மண்ணை விட்டு, வேறோரு நாட்டிற்கு பிழைப்புத் தேடி வரும் இவர்களுக்கு நாம் அரவணைப்பு தர வேண்டும் எனவும் அவர்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தர வேண்டும் என்றும் போப் முன்னதாக வலியுறுத்தியுள்ளார்.
