Thursday, 4 June 2015

எச்சரிக்கை – ஃபேஸ்புக் கணக்குத் திருட்டு

facebookcolor
ஃபேஸ்புக் கணக்கை திருடவும் அதன் மூலம் பணத்தை எடுக்கவும் தற்போது ஒரு SCAM உருவாகி இருக்கிறது.
உங்கள் கணக்கை மற்றவர்கள் புகார் செய்து இருப்பதாகவும் இதைச் சரி செய்ய உங்கள் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி கடனட்டை விவரங்கள் கேட்டுப் பணத்தைத் திருடும் கும்பல் இணையத்தில் மிரட்டிக்கொண்டு இருக்கிறது.
போலியான அறிவிப்பு
facebook-recovery-spam
Notification: Your Account will be Disabled!
Account FACEBOOK you have already been reported by others about the abuse of account, this is a violation of our 
agreement and may result in your account is disabled. Please verify your email account to unblock and help us do more 
for security and convenience for everyone.
Immediately do recover your Facebook account, by clicking on the link below: 
hxxp://j[DOT]mp/1HloHXd?help-facebook-recovery
“Attention” 
If you ignore this message, we can not recover your account and your account will be permanently disabled. 
Sorry to interrupt your convenience.
The Facebook Team
இந்த மாதிரி வரும் போது படிக்கும் எவருக்கும் துவக்கத்தில் திக்கென்று தான் இருக்கும்.
பின்வரும் படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். News and Image Credit – https://blog.malwarebytes.org
facebook-phishing
Phishing
Phishing எனப்படுவது என்னவென்றால், உண்மையான தளங்களைப் போலவே வடிவமைப்பில் தளத்தை உருவாக்கி அதை நம்ப வைத்து நம்முடைய கடவுச்சொல்லைப் பெற்று ஹேக் செய்வது.
உதாரணத்திற்கு பார்க்க ஃபேஸ்புக் / ஜிமெயில் தளம் போலவே இருக்கும் ஆனால், முகவரியைப் பார்த்தால் வேறு தளமாக இருக்கும். இதில் தான் பலர் ஏமாந்து விடுகிறார்கள். இதன் பெயர் தான்Phishing . கவுண்டர் சொல்ற மாதிரி வலை போட்டுப் பிடிக்கிறது :-) .
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
உங்களுக்கு இது போலச் சந்தேகமான சுட்டி (Link) வந்தால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது சுட்டியின் முகவரியைத் தான். இரண்டு விதமாக இருக்கும்.
ஒன்று ஃபேஸ்புக் முகவரியாக இல்லாமல் வேறு ஏதாவது முகவரியாக இருக்கும், இரண்டாவது புரியாத சுருக்கமான முகவரியாக (Shortener link) இருக்கும். இரண்டுமே ஆபத்து.
உங்களுக்கு ஃபேஸ்புக்கில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் அது ஃபேஸ்புக் முகவரியாகத் தான் இருக்கும் எனவே, தேவையில்லாமல் பயப்பட்டு உங்கள கணக்கை தாரை வார்த்து விடாதீர்கள்.
உங்களுக்கு வந்த சுருக்கப்பட்ட முகவரியை http://checkshorturl.com/expand.php இந்தத்தளத்தில் கொடுத்தால் முழுமையான முகவரியைக் கொடுக்கும். பரிசோதிக்கச் சுருக்கப்பட்டhttp://goo.gl/Q2wQQx இந்தச் சுட்டியைக் கொடுத்துப் பார்க்கலாம்.
இந்த முறையில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதோடு உங்கள் கடனட்டை (Credit card) விவரங்களும் அவர்களுக்குச் சென்று விடும். எனவே, இது போல வாயில் வடை சுடும் அறிவிப்பு வந்தால் அவசரப்பட்டு எடுத்து சாப்பிட்டு விடாதீர்கள் :-)
Loading...