ஃபேஸ்புக்கில் உள்ள பல்வேறு வசதிகளைப் பற்றி அறியாமலே பலர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எதைப் பகிர்வது / பகிரக் கூடாது என்பதில் பல குழப்பங்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்த வசதி கூகுள் + ல் சில எளிமையாகப் புரிந்தாலும் ஃபேஸ்புக்கில் கொஞ்சம் குழப்பமாக / தெரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது என்பது உண்மை தான். இதில் உள்ள வசதிகளைப் பார்ப்போம். Image Credit – Mashable.com
பின்வருபவை தங்களுக்கு அந்தரங்கம் (ப்ரைவசி) வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே! Public க்காக பகிர்பவர்கள் சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
அந்தரங்கம் வேண்டும் என்பவர்கள் நண்பர்களுக்கு இடையே மட்டுமே தங்கள் நிலைத்தகவலை (Status) பகிர்வார்கள்.
ஆனால், அதிலும் சில நிலைத்தகவலை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைப்பார்கள் அதனால், அனைவரும் பார்ப்பார்களே என்று பகிர விருப்பப்படுவதைக் கூட பகிரவே மாட்டார்கள்.
இது போல யோசிக்க வேண்டியதே இல்லை. இதையெல்லாம் எளிதாக சமாளிக்கலாம். உங்களுக்கு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வம் என்றால் இதில் ஆர்வம் உள்ளவர்களை மட்டும் ஒரு பட்டியல் உருவாக்கி அந்தக் பட்டியலுக்கு மட்டும் நிலைத்தகவலை பகிரலாம்.
இதனால் ஆர்வமில்லாதவர்கள் இதை தங்களுடைய டைம் லைனில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டியலை உருவாக்க Friends என்பதை இடது புறத்தில் க்ளிக் செய்தால், படத்தில் உள்ளது போல வரும். இதன் மூலம் நீங்கள் பட்டியல் உருவாக்கிக் கொள்ளலாம்.

சிலர் தங்கள் நண்பர்கள் பட்டியலில் நிறைய நண்பர்களை வைத்து இருப்பார்கள் ஆனால், அதில் சிலர் மட்டுமே interact செய்வார்கள் மற்றவர்கள் Silent reader ஆக இருப்பார்கள்.
யார் யார் உங்களுடன் Like / comment என்று தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்படியும் உங்கள் நிலைத்தகவலைப் பகிரலாம்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது முதலில் ஒரு பட்டியல் (List) உருவாக்கி யார் யார் உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் இதில் சேர்க்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப எளிது.
இவ்வாறு ஒரு பட்டியலை உருவாக்கியவுடன், நீங்கள் புதிதாக ஒரு நிலைத்தகவலை பகிரும் போது அதில் Friends என்று இருப்பதற்குப் பதிலாக Custom என்று தேர்வு செய்ய வேண்டும்.
இதில் Don’t Share this with என்பதை தேர்வு செய்து அதில் இந்த பட்டியலைக் கொடுத்து விட்டால் போதும்.
இந்த நிலைத்தகவல் இவர்களைத் தவிர மற்றவர்கள் பார்க்கலாம். இதை ஒரு முறை செய்தால் இது Default ஆகவே அடுத்த முறையும் இதே வசதியை எடுத்துக்கொள்ளும். பகிர்ந்த பிறகும் நீங்கள் மாற்றலாம், ஒன்றும் பிரச்சனையில்லை.
உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிலைத்தகவலை உங்கள் நண்பர்களில் இருவர் மட்டும் பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறீர்கள்.
அதாவது அவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம், சண்டைக்கு வரலாம் என்று கருதுகிறீர்கள் என்றால், மேலே கூறியது போல அந்தப் பட்டியலுக்கு பதிலாக இவர்கள் பெயரைDon’t Share this with ல் குறிப்பிட்டால் போதுமானது அவர்களால் இதைக் காண முடியாது.
இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலையை, சண்டையை, வீண் சச்சரவை தவிர்க்க முடியும்.
நமக்கு சிலரின் நிலைத்தகவல் பிடிக்காது அதோடு அவர்கள் நம் நண்பர்கள் பட்டியலிலும் இருக்க மாட்டார்கள் இருப்பினும் நம்முடைய நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் யாராவது நமக்குப் பிடிக்காத ஒருவரின் கருத்தைப் (Like / Share) பகிர்வார்கள் (அவருக்குப் பிடித்து இருக்கலாம்).
இதைத் தடுக்கவும் ஒரு வழி இருக்கிறது.
அந்த Drop Down list ஐ க்ளிக் செய்தால் அதில் மேலே உள்ளது போல வரும். அதை தேர்வு செய்து அதில் உள்ள வசதிகளை நம் தேவைக்கு ஏற்றது போல பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் படத்தில் உள்ளதை விளக்குகிறேன். இதை என்னுடைய நண்பர் தன்னுடைய டைம் லைனில் பகிர்ந்து இருக்கிறார்.
1. I don’t want to see this
உங்களுக்கு உங்கள் நண்பர் பகிர்ந்து இருந்த குறிப்பிட்ட ஒரு செய்தி பிடிக்காமல் இருக்கலாம், இது தேவையில்லாமல் உங்கள் கண்களில் பட்டு உங்களை கோபப்படுத்தலாம் / எரிச்சல் அடைய வைக்கலாம்.
எனவே, இதை தேர்வு செய்தால் உங்கள் டைம் லைனில் இருந்து இந்த செய்தி (மட்டும்) மறைந்து விடும்.
2. Unfollow < Friend Name >
இதை தேர்வு செய்தால் உங்கள் நண்பர் பகிரும் எந்த செய்தியும் உங்கள் டைம் லைனில் வராது (Unfriend ஆகாது).
3. Hide all from கிரி Blog
இதை தேர்வு செய்தால் உங்களின் இந்த நண்பர் மட்டுமல்ல வேறு ஒரு நண்பர் கிரி Blog ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து பகிர்ந்தாலும் உங்கள் டைம் லைனில் வராது. இது மிகவும் பயனுள்ளது.
ஏனென்றால் நமக்குப் பிடிக்காத நிலைத்தகவல்களை தொடர்ந்து நம் நண்பர் (Like / Share) பகிர்கிறார் என்றால் இதை செய்து விட்டால், திரும்ப நம் பார்வையில் பட்டு நம்மை எரிச்சல் படுத்தாது.
ஒரு குறிப்பிட்ட நண்பரை Unfriend செய்ய விருப்பமில்லை ஆனால், நீங்கள் பகிரும் எதையும் அவர் பார்க்கக் கூடாது என்று நினைத்தால் அவரை Restricted குழுவில் சேர்த்து விட்டால் போதுமானது.
நீங்கள் இடும் எந்த நிலைத்தகவலையும் அவரால் பார்க்கவே முடியாது.
ஒரு குறிப்பிட்ட நண்பரை Unfriend செய்ய விருப்பமில்லை ஆனால், அவர் எதைப் பகிர்ந்தாலும் நீங்கள் பார்க்க விருப்பப்படவில்லை என்றால், Unfollow செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நண்பரை Unfriend செய்ய வேண்டிய அவசியமில்லை ஆனால், அவர் பகிரும் எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை (மேலே கூறியுள்ள 2 வது குறிப்பு).
நீங்கள் விருப்பப்படும் போது திரும்ப Follow செய்து கொள்ளலாம்.
உங்களை ஒருத்தர் தொல்லை செய்து கொண்டே இருக்கிறாரா? Block செய்து விடுங்கள். அவ்வளோ தான்.. இதன் பிறகு என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பொய்யான கணக்கில் வந்து தான் பிரச்சனை செய்ய முடியும்.
இது போல ப்ரைவசிக்கு ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்து இருக்கும் ஃபேஸ்புக்கை திட்டிக்கொண்டு புலம்பிக் கொண்டு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டும் போதாது.. அதில் உள்ள வசதிகளையும் தெரிந்து கொண்டு முழுமையாகப் பயன்படுத்தினால் கூடுதல் பயனைப் பெற முடியும்.
இறுதியாக, என்னதான் பாதுகாப்புகள், வசதிகள் என்று இருந்தாலும், நீங்கள் இணையத்தில் பகிர்ந்து விட்டீர்கள் என்றால் அது எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்.
உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ள ஒருவர் Screenshot எடுத்து போட்டுவிட்டால் கூட போதும். கதை முடிந்தது. இது போல நடந்து ஒருவர் நாட்டை விட்டே சென்ற உண்மைக் கதையெல்லாம் உண்டு.
எனவே இணையத்தில் பகிர வேண்டியதை மட்டும் தான் பகிர வேண்டும் அனைத்தையுமே அல்ல. தொழில்நுட்பம் எப்படி நம் அந்தரங்கத்தை உலகம் முழுக்க பரப்புகிறது, எப்படி நாம் எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றி விரைவில் எழுதுகிறேன்.
கொசுறு
ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் எதைப் பகிரலாம் / பகிரக் கூடாது, யாரை நட்பு பட்டியலில் சேர்க்கலாம் என்பது போன்ற பல்வேறு விசயங்களை சம்பவங்களுடன் கதையாக அழகாக இங்கே விளக்கி இருக்கிறார்கள். இது PDF மின்னூலாக உள்ளது.
இதை நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கதையாக / அனுபவமாக இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. பரிந்துரை செய்தது நண்பர் ஸ்ரீநிவாசன் Balhanuman.
இதைப் படித்தால், நான் மேலே கூறியுள்ள வசதிகள் மூலம் எப்படி இதை சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பது எளிதாகப் புரியும்.



