இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்துக் ஏற்ப அரசியல் பிரதிநித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தமிழ் முற்போக்கு முன்னணியின் பிரதித்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
20 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்தின் போது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமானால் தமிழ் முற்போக்கு முன்னணி அதனை அனுமதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்கெலியா, பொகவந்தலாவை, லிந்துலை ஆகிய பிரதேசங்ளைச் சேர்ந்த தோட்டங்களுக்கான நலன்புரி வசதிகளை நேற்று வழங்கி வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி மக்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப அரசியல் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் வகையிலேயே புதிய தேர்தல்; சீர்த்திருத்தம் அமைய வேண்டும்.
இது குறித்து ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் அமைச்சரவையிலும் கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு மாறாக எவராவது செயற்பட்டால் மக்களுக்காக எவ்வித தியாகமும் செய்ய தமிழ் முற்போக்கு முன்னணி காத்திருப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
