Monday, 15 June 2015

எஸாவின் வால் நட்சத்திரங்களை ஆராயும் விண்கலம் செயற்படுகிறது.













ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான 'எஸா' வினால் அனுப்பப்பட்ட வால்வெள்ளில்களை ஆராயும் விண்கலம் செயற்பட ஆரம்பித்துள்ளதுடன், பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பில்லே' என பெயரிடப்பட்டுள்ள முதலாவது வால்வெள்ளிகளை ஆராயும் விண்கலம் குறிப்பிட்ட 'கொமட் 67பீ' வால்நட்சத்திரத்தில் தரையிறங்கியுள்ளது.

ரொஸெட்டா எனப்படும் தாய் செய்மதியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் புறப்பட்ட பில்லே கடந்த 60 மணித்தியாலங்களுக்கு முன்னர் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

திட்டமிடப்பட்ட கொமட் 67பீ வால் நட்சத்திரம் சூரியனுக்கும், பில்லே விண்கலத்திற்கும் இடையில்  பயணித்த நிலையில் தமது பணிகளை இலகுவாக ஆரம்பிக்கக் கூடியதாக இருந்ததாக பிரித்தானியாவின் விஞ்ஞான ஆய்வு செய்தியாளர் ஜொனத்தன் ஆமொஸ் தெரிவித்துள்ளார். 
Loading...