அமெரிக்கப் பிரஜைகளிடமிருந்து பெருமளவிலான தொலைபேசி தரவுகளை சேகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கும் சட்டத்தை நீட்டிக்கத் தவறியமைக்காக அதிபர் அலுவலகம் செனட் சபையை கடுமையாக விமர்சித்துள்ளது.
'பொறுப்பற்ற தவறு' என்று அதனை வர்ணித்துள்ள வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர், செனட் சபை கட்சி பேதங்களை மறந்து நிலைமைய சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தரவுகளை சேகரிப்பது மிக முக்கியமானது என்று வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மை பலம் கொண்டுள்ள செனட் சபையில் இருதரப்பு உடன்பாட்டை எட்டமுடியாமல் போய்விட்டது.
எனினும், புதிய சட்டம் எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
