பசுபிக் பெருங்கடல் மீதான மோசமான காலநிலை காரணமாக சீனாவிலிருந்து ஹவாய் செல்லும் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தின் பயணம் கைவிடப்பட்டு, அந்த விமான ஓட்டுனருக்கு ஜப்பானுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹவாய்க்கு செல்லும் இந்த ஆறு நாள் பயணம் தான் மிகவும் முக்கிய கட்டமாக பார்க்கப்பட்டது.
ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவு இறக்கையைக் கொண்ட இந்த விமானம், ஒரு சராசரி குடும்ப காரின் எடையை மட்டுமே கொண்டது.
சூரிய சக்தி கொண்டு இயங்கும் இந்த விமானம் சரியாகப் பறக்க, சாதகமான காற்றும் மேகம் அற்ற வானமும் தேவை.
